விடியலை நோக்கிய ஓர் இரவு
விடியலை நோக்கிய பயணம்
ஒரு அழகான அழகிய அதிசியம் நிறைந்த அற்புதங்களைக்கொண்ட ஓர் கிராமம் அந்த கிராமத்தில் எப்பொழுதும் இப்பொழுதும் முப்பொழுதும் ஆனந்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அந்த அற்புதங்களை சூழ கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் எப்பொழுதும் போல காலநிலைகழும் மாறிக்கொண்டிருக்கும்.
அந்த கிராமத்தின் முதல் நாள் இன்று...
இதுவரை நாம் அந்த கிராமத்தின் சிறப்பை பார்த்தோம் அனால் அந்த கிராமத்தின் பெயர் என்ன என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்க ஆம் எனக்கும் உங்களைப்போல் ஆர்வமாகத்தான் இருந்தது அன்று இதோ அந்த கிராமத்தின் பெயர் ஆனந்தபுரம்.
அத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட ஆனந்தபுரத்தில் ஏற்பட்ட அந்த ஒரு நாள் அப்படி என்ன அங்கு நடந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறதா ஆம் எனக்கும் அப்படித்தானே இருந்தது அன்றும் அதோடு ஆனந்தபுரத்தில் முதல் நாள் இரவு தொடர்ந்தது .
ஆனந்தபுரத்தின் இரண்டம் நாள் ....
ஆனந்தபுரத்தில் முதல் நாள் இரவு முடியத்தொடங்கியது அப்பொழுது மணி காலை 5 மணி சேவலும் கூவ செவியோரம் ஓசை அழைப்பாயா வீட்டின் கதவுகள் மெல்ல திறக்க வண்ண மயில்களும் வாசமிகு எழில்களும் அந்த இனிய காலை பொழுதின் தென்றலுடம் கலந்து வீச மெல்ல கதவுகளை திறந்து வந்தால் வள்ளி .மெல்ல மெல்ல நேரமும் போக காலை தென்றலுடன் சேர்ந்து நம் உலகத்தின் ஒளிவிலக்கன சூரியனும் வெளிச்சத்தை கொடுக்கத்தொடங்கினான்.
அந்த காலைப்பொழுதில் தன் தினசரி வேலைகளை செய்யத்தொடங்கினாள் வள்ளி, மெல்ல மெல்ல நேரமும் போக மணியும் ஆனது 8 அப்பொழுது வள்ளியின் வீட்டு கதவு தட்டும் சத்தம் வள்ளியின் செவியில் பாய்ந்தது வள்ளியும் விரைந்து வந்து கதவை திறக்க வெளியே காத்திருந்தான் வெள்ளையன் .
வெள்ளையனை உள்ளே அழைத்து அண்ணத்தை பரிமாற வெள்ளையனும் பசியாற வள்ளியின் மடியில் தலைசாய்ந்தான் வெள்ளையன்.
யார் இந்த வெள்ளையன் எதற்க்கு வள்ளியின் வீட்டிற்க்கு வந்தான் உண்டான் வள்ளியின் மடியில் சாய்ந்தான் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது அன்று.
வெள்ளையன் வள்ளியின் கணவன் ஆம் .! வெள்ளையனின் தொழில் விவசாயம் ஆம் வெள்ளையன் ஓர் உழவன் மட்டும்மல்ல அன்பும் பண்பும் பாசமும் நிறைந்திருக்கும் ஆனந்தபுரத்தையும் இரவுநேரத்தில் காவல்காத்து வந்தான் வெள்ளையனுக்கு ஐந்து வயல்கள் இருந்தது அந்த ஐந்து வயல்களிலும் நெல் பயிரை பயிரிட்டுருந்தான் வெள்ளையன் மட்டும் இன்றி ஆனந்தபுரத்தில் இருந்த மற்ற விவசாயிகளும் நெற்பயிர்களை பயிரிட்டுருந்தார்கள்.
நெற்பயிர்கள் நன்கு விளைந்து செவ்வானில் தெரியும் செந்நிறம் சூழ இனிய மனம்முடன் தென்றலும் வீச இன்னிசை தரும் மூங்கிலுடன் சேர்ந்து அசைந்தாடிக்கொண்டிருக்கும் செங்கதிர்கல் அறுவடைக்கு வந்தது.
மெல்ல மெல்ல நேரமும் போக ஊர்மக்கள் ஒன்றுகூடி அறுவடைக்கு நாள் குறித்தனர் அந்த நாள்....? நாளை விடியல்.
நேரமும் ஆகா செங்கதிர் சாயா சூரியனும் மறைந்தான் அப்பொழுது மணி 7 வெள்ளையனும் வீட்டில் இருந்து புறப்பட வள்ளியும் வழியனுப்ப புறப்பட்டான் காவல்காக்க. மெல்ல மெல்ல நேரமும் போக மணியும் ஆனது 9 ஊர் மக்களும் நாளை நிகழவிருக்கும் அறுவடை திருநாளை நினைத்து இன்பவெள்ளத்தில் உறங்க வள்ளியும் தனது வேலைக்ககை முடித்துவிட்டு உறங்கினால்.
ஆனந்தபுரத்தின் மக்களின் ஓடிக்கொண்டிருந்தது ஒன்றுதான் அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா ஆம் எனக்கும் இருந்தது அது நாளை விடியல் அறுவடை திருவிழா என்றுதான்.
மெல்ல மெல்ல நேரமும் போனது மணியும் ஆனது எப்பொழுதும் போல இப்பொழுதும் இன்னிசை தரும் குயில்களும் கூவ சேவலும் திமிரெலா வசமிகு இன்னிசை தென்றலும் வீசி வர சூரியனும் ஒளிர்விட தேகம் சிலிர்த்தெழுவோம் என்று ஆனந்தபுரத்தின் மூன்றாம்நாளுக்காக எண்ணிக்கொண்டிருந்தனர்.
ஆனந்தபுரத்தின் மூன்றாம்நாள் எண்ணி ஊர் மக்களும் காத்திருக்க வள்ளியும் தன் கணவன் வெள்ளையனின் வருகைக்கும் காத்திருக்க சேவலும் குயிலும் விடியலை நோக்கியிருக்க வரூமோ ஆனந்தபுரத்தின் மூன்றாம்நாள்.......?
Comments
Post a Comment