வலிகள் நிறைந்த பாதை
வலிகளை மட்டுமே கண்ட குழந்தை......
அன்பெனும் பிணைப்பில் இணையுண்டு உருவான கருவாம் அது நம் விஜய்யாம் .
ஓர் அழகிய மலைதொடரின் அங்கத்தின் அருகே அமைந்திருந்தது ஓர் அழகிய குடிசை ஒன்று அந்த குடிசையில் கிருஷ்ண பகவானின் அனுகிரகம் கொண்ட க்ரிஷ்ணன்னும் அவரது ஆசி பெற்ற அவரது மனைவி சுமதியும் வாழ்ந்து வந்தனர்.
அழகிய கார்முகில்களும் வெண்முகில்களும் வசமிகு தென்றலுடன் இணைந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும் அந்த இனிய காலைப்பொழுதில் அழகிய குடிசையில் இருந்து வந்த ஓர் அலறல் சத்தம் அது என்னவென்று அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதா ஆம் எனக்கும் அப்படித்தானே இருந்தது.
அந்த அழகிய காலைப்பொழுதில் தென்றல் என் காதோரம் கொண்டு வந்து சேர்த்த அலறல் குரல் என்னவென்று தெரியும்மொ அது ஓர் குழந்தையின் அலறல் குரல் அந்த குழந்தை அழகிய மலைத்தொடரின் அங்கத்திலே குடியிருந்த க்ரிஷ்ணன் மற்றும் சுமதியின் புதல்வன் ஆவான்.
தனிமையில் இருந்த அந்த இருவருக்கும் துணையாய் வந்து பிறந்தான் விஜய் ஆம் அக்குழந்தையின் பெயர் விஜய். அன்னை பாலூட்ட சோறூட்ட தந்தை வீரத்தையும் அறிவையும் ஊட்ட மெல்ல மெல்ல வளருகிறான் விஜய்.
அந்த அழகிய கார்முகில்களும் வெண்முகில்களும் தென்றலுடன் சேர்ந்து சில்லென்று வீசிக்கொண்டிருக்கும் அந்த அழகிய மலையில் ஆனந்தத்துடன் ஆடி பாடி துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கிறான் விஜய் மெல்ல மெல்ல நாட்களும் போக வருடங்களும் ஆகா இளம்பெறுவதை அடைகிறான்.
தன் இளம்பறுவதை கழித்த அந்த அழகிய மலை தொடறில் வேறுயாரும் இன்றி தன குடும்பத்தோடு தனியாய் நின்றான் அவனது தாய் தந்தையருக்கு வயதும் ஆகா வறுமையும் சூழ பசியின் பிடியில் சிக்க தன் சந்தோஷங்களையும் இழக்க தனது தாய் தந்தையாரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்த்தோடு விஜயின் முதல் பயணம் தொடங்கியது.
ஆகாயத்தை போல விரிந்து படர்ந்து கார்மேகமும் வெண்மேகமும் மனம் வீசும் தென்றலுடன் சேர்ந்து உலாவிக்கொண்டிருந்த அந்த அழகிய மலை தொடரை விட்டு புறப்பட்டான் தன் குடும்பத்தின் விடியலைநோக்கி ......
விடியலை நோக்கி செல்லும் விஜயின் பொற்பாதங்கள் கற்க்களும் முற்க்களும் நிறைந்த பாதையில் தொடர்ந்து செல்கிறது விடியலை நோக்கி ...
Comments
Post a Comment