காற்றில் கரைந்த மலை
வானையே தொடும் அளவிற்க்கு உயர்ந்திருந்த அற்புத மரங்களும் ஆயுளையே நீடிக்கக்கூடிய அற்புத மூலிகைகளும் பார்க்கும் இடம்மெல்லாம் கண்களுக்கு நவரசத்தையும் ஊட்டும் வண்ணமிகு மலர்களும் வாசம்மிகு மலர் செடிகளும் கொடிகளும் வானிலிருந்து உற்றுவதைபோல் கானா காட்சியளிக்கும் நீர் அருவிகளும் கண்களுக்கு கானா பல உயிர்களும் வாழும் ஓர் அழகிய அற்புத மலை
அம்மலையில் ஓர் அழகிய பசு கூட்டம் வாழ்ந்து வந்தது அக்கூட்டத்தில் இணைபிரியா ஐந்து சகோதர பசுக்களும் இருந்தது அந்த ஐந்து பசுக்களும் எங்கு செள்வதாக இருந்தாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்
அழகிய அற்புதம் நிறைந்த அம்மலையில் தினசரி தங்களுக்கு தேவையான உணவை சாப்பிட்டு பசியை போக்கிக்கொண்டிருந்தனர் தன் நண்பர்களோடு எப்பொழுதும் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து ஆடி பாடி திரிந்து கொண்டிருந்தார்கள்.
ஐந்து பசுக்களும் சேர்ந்து அழகிய மலையில் செல்லாத இடமேயில்லை ஒருநாளில் ஐந்து பசுக்களில் ஒரு பசு கேட்டது நாம் பிறந்ததில் இருந்து இன்றுவரை இக்காட்டிலேயே இருக்கிறோமே நாம் ஐவரும் இக்காட்டை விட்டு வெளியே சென்று என்ன இருக்கிறது என்று பார்த்து வருவோமா என்று கேட்க
அதற்க்கு மற்ற பசுக்கள் எங்களுக்கும் பார்க்கவேண்டு என்றுதான் ஆசை என்று கூற ஐவரும் சேர்ந்து தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு தனது முதல் அடியை எடுத்து வைத்தார்கள் அம்மலையை விட்டு .
பல நாட்கள் கழித்தி அம்மலையை விட்டு வெளியே வந்த பசுக்கள் மனிதர்களை சந்தித்தது. ஐந்து பசுக்களும் சேர்ந்து சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தது.
மரங்களை வேரோடு நோண்டும்போது அம்மலை தன்னுள் மறைத்து வைத்து இருந்த அதிசத்தியத்தை பார்க்க மனிதனின் ஆசை பேர் பேர் ஆசையாக மார காண கிடைக்கா பசுமை படர் அழகை வைத்திருந்த அம்மலையை தோண்டத்தொடங்கினான்.
மனிதனின் பேராசையால் அற்ப்புத அதிசயங்களையும் ஆகாயத்தையே தொடுமளவிற்கு உயர்ந்த மரங்களும் ஆகாயத்தில் இருந்து வருவதைப்போல் கானா காட்சியளிக்கும் நீர் அருவிகளும் அற்புத உயிரினங்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அம்மலை காற்றில் கரைந்த நுரைபோல் மறைந்து போனது.
ஐந்து பசுக்களும் தனது ஆசை தீரும் அளவிற்கு வெளியில் சுற்றி திருந்து விட்ட நிலையில் மீண்டும் தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ புறப்பட்டது.
நாட்களும் பல கடந்துப்போக பசுக்களும் தனது குடும்பத்தோடு வாழ்ந்த மலையை தேடி ஓய்வில்லா பயணத்தை தொடர கிட்டுமோ அம்மலை ......?
Comments
Post a Comment