காலத்தை கடந்த காதல்
மறுமுறை மாயவன் தன் வழி செல்ல மீண்டும் மாயவள் மாயவனை உரசிபோக உண்டான உணர்ச்சி காதல்.
மாயவள் உரசி போக மாயவன் மணம் உருகிப்போக உண்டானது உணர்வு காதல்.
மாயவன் தன் வழி மறந்து மாயவள் வழி செல்ல உண்டானது ஆசை காதல்.
மாயவன் மனம் உடைந்து போக மாயவள் மனம் உருகி போக உண்டானது உண்மை காதல்.
மாயவள் மலர்வைக்க மாயவன் மறைந்திருக்க உண்டானது அன்பு காதல்.
மாயவனும் மாயவளும் பிரியாது உலகை சுற்றிவர உண்டானது பாசப்பிணைப்பு காதல்.
மாயவன் மாயவளை காண மனைக்கு செல்கையில் உண்டானது வசிய காதல்.
மாயவள் மாயவனை காண செல்கியில் உண்டானது இன்ப காதல்.
மாயவன் தன் நிலையை சொல்ல உண்டானது வெறுப்பு காதல்.
மாயவள் மாயவனை விட்டு விலகி செல்ல உண்டானது வஞ்ச காதல்.
மாயவனை விட்டு மாயவள் பிரிந்து செல்ல உண்டானது பொய் காதல்.
Comments
Post a Comment